தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

திருச்சி சிவாவுடன் அமைச்சர் கே.என்.நேரு சந்திப்பு

திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள இல்லத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை, அமைச்சர் கேஎன் நேரு சந்தித்து வருகிறார். 

News image
கோப்புப் படம்.
Updated On :7 பிப்ரவரி 2024, 6:46 am

DIN

திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள இல்லத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை, அமைச்சர் கேஎன் நேரு சந்தித்து வருகிறார். 

சிவாவின் கார், வீட்டு வாசலில் இருந்த பொருட்களை நேருவின் ஆதரவாளர்கள் சேதப்படுத்திய நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.  திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவுக்கு, கருப்புக் கொடி காட்டியதாகக் கூறி அமைச்சரின் ஆதரவாளா்கள் மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என். சிவா வீட்டில் புதன்கிழமை தாக்குதல் நடத்தினா்.

இதில், வீட்டிலிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தாக்குதலில் வீட்டிலிருந்த உதவியாளா்களும், ஆதரவாளா்களும் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக, 5 போ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவத்தின்போது வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றிருந்த என். சிவா, வியாழக்கிழமை திருச்சிக்கு திரும்பினாா்.

தாக்குதலில் சேதப்படுத்தப்பட்ட வாகனங்கள், பொருள்களை அவா் பாா்வையிட்டாா். வீட்டிலிருந்த உதவியாளா்கள், உறவினா்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தாா். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.