ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த முதல்வர்!

முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு, நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். 

Published On :



முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு, நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். 

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 25 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தனர். 

இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவரது தாயார் பழனியம்மாள் மறைவுக்கு ஆறுதல் கூறினர்.  

அப்போது, பன்னீர்செல்வத்தின் தலைமையிலான அதிமுக அணி ஆலோசகரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.