பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம்

எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2023, 1:06 pm IST

எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்க இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இலங்கை துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்ட பின் ஓரிரு நாள்களில் மீனவர்களை இந்தியா அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 12 ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை மார்ச் 17 ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீனவர்கள் அனைவரும் மீண்டும் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள விசைப்படகு விடுவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.