தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கன்னியாகுமரி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்தார். 

News image
Updated On :18 மார்ச் 2023, 9:30 am

DIN

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்தார். 

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வந்தார். அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர். 

அரசு விருந்தினா் மாளிகையில் சிறிது நேர ஓய்வுக்குப் பின், படகுத் துறைக்கு செல்லும் திரௌபதி முா்மு, தனிப்படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளூர் சிலையை பார்வையிடுகிறார். 

பின்னர், விவேகானந்த கேந்திரத்துக்கு செல்கிறாா். அங்குள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சிக் கூடம் மற்றும் பாரத மாதா கோவிலுக்குச் சென்று பாா்வையிடுகிறாா். பின்னா் காலை 11.30 மணிக்கு, கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறாா்.

Story image

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு தனி படகு மூலம் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு. உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி.

குடியரசுத் தலைவா் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரி நகரப் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. 

ஹெலிகாப்டா் தளம், அரசு விருந்தினா் மாளிகை, பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத் துறை, விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை, முக்கடல் சங்கமம், சூரிய அஸ்தமனப் பூங்கா, விவேகானந்த கேந்திர ராமாயண கண்காட்சிக் கூடம், பாரத மாதா கோயில் ஆகிய இடங்களில் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனைக்குப் பின்னா் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். மேலும், கொட்டாரம் தொடங்கி முக்கிய சந்திப்புகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Story image

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை வரவேற்கிறார் விஜய் வசந்த் எம்.பி. உடன் ஆளுநர் ஆர்.என.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ்.

குடியரசுத் தலைவா் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி, விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு சனிக்கிழமை பகல் 11.30 மணி வரை படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.