வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ. 171 குறைப்பு

சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 171 குறைக்கப்பட்டு, திங்கள்கிழமை முதல் ரூ. 2,021 ஆக விற்பனையாகிறது. 
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ. 171 குறைப்பு

சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 171 குறைக்கப்பட்டு, திங்கள்கிழமை முதல் ரூ. 2,021 ஆக விற்பனையாகிறது. 

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது பொதுவானது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

இதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு ரூ. 2,192 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மே 1-ஆம் தேதி முதல் ரூ. 171 குறைக்கப்பட்டு ரூ. 2,021 ஆக விற்பனையாகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com