காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டையில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம்

ராணிப்பேட்டையில் கிரிக்கெட் வீரர்களுக்கான 3 வார கோடைகால பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.  

News image
Updated On :1 மே 2023, 5:28 am

DIN

ராணிப்பேட்டையில் கிரிக்கெட் வீரர்களுக்கான 3 வார கோடைகால பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. 
ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டத்தைச் சேர்ந்த 19,16,14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான மூன்று வார கோடை காலப் பயிற்சி முகாம் ராணிப்பேட்டை பாரி கிளப் விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை காலை தொடங்கியது. 
இந்த பயிற்சி முகாமை ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சந்தோஷ் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்து, இந்த மூன்று வார கால பயிற்சி முகாமை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

Story image

இதில் மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர்கள் டி.கே.குமார்,நாராயணசாமி, லட்சுமணன், நடராஜன், பயிற்சியாளர் ஜானகிராமன், இணை பயிற்சியாளர்கள் ஜெகன் பாபு, தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.