பிடிஆர் ஆடியோ விவகாரம் மட்டமான அரசியல்: முதல்வர் ஸ்டாலின்
மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
மேலும், சமூக வலைத்தளங்களில் கோயபல்ஸ் பொய்களைக் கட்டவிழ்க்கும் பா.ஜ.க. என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்திருக்கும் விடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த விடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் மு.க. ஸ்டாலின், தெலங்கானாவில் முஸ்லீம் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று சொல்லும் உள்துறை அமைச்சர்...
சமூக வலைத்தளங்களில் கோயபல்ஸ் பொய்களைக் கட்டவிழ்க்கும் பா.ஜ.க. என்றும் பதிவிட்டுள்ளார்.
உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, ஆடியோ விவகாரத்தில் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே 2 முறை விளக்கம் தந்திருக்கிறார். மேலும், மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் நான் பதிலளித்து, மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று உள்துறை அமைச்சரே பேசியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது,
சிறுபான்மை சமூகத்தின் மீதான வன்மம்தான் இதன் மூலம் வெளிப்படுகிறது. தேர்தல், அரசியல் லாபங்களுக்காக உள்துறை அமைச்சர் இப்படி சொல்லியிருக்கிறார். இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்து மக்களை திருப்திப்படுத்தும் என்று பாஜக தலைமை, அவர்களாகவே கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், பாஜகவிற்கு வாக்களிக்காத பெரும்பாலான மக்கள் இந்துக்கள்தான். ஆனால் அவர்கள் அமைதியையும் சகோதரத்துவத்தையும் விரும்பும் மக்கள்.
பாஜக ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் மீது தங்களது வெறுப்புணர்ச்சியை திணித்து அதுதான் ஒட்டுமொத்த மக்களின் மனநிலையும் என்று காட்ட நினைக்கிறது. அதற்கு துணையாக இருப்பது, பொய்களையும் கற்பனையான கதைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க பரப்புரை இயந்திரமாக இருப்பது சமூக ஊடகங்களில் பாஜகவினர் வைத்திருக்கும் கணக்குகள் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...