எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

டாஸ்மாக் வருமானத்தில் தமிழக அரசு செயல்படவில்லை: செந்தில் பாலாஜி

டாஸ்மாக் வருமானத்தில் அரசை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். 

News image
கோப்புப்படம்
Updated On :3 மே 2023, 8:39 am

DIN

டாஸ்மாக் வருமானத்தில் அரசை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 'மால்களில் டாஸ்மாக் கடைகளினுள்தான் மது பானங்களை வழங்கும் தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. 21 வயதுக்கு குறைவானவர்களால் அதை எடுக்க முடியாது. ஆனால் எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. சாலையிலோ, பொது இடங்களிலோ இந்த தானியங்கி இயந்திரம் இருப்பது போல எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. மால்களில் டாஸ்மாக் கடைகள் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன. 

டாஸ்மாக்கில் ரூ. 5, ரூ. 10 என கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1,977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 5.5 கோடி அபராதம் அவர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டுள்ளது. 

தற்போதுவரை 92 கடைகள் மூடப்பட்டுள்ளன, மேலும் 500 கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. 

டாஸ்மாக் வருமானத்தை வைத்துதான் அரசை நடத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை' என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.