பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பாலத்திற்கு கீழ் காயங்களுடன் ஆண் சடலம்: காவல் துறை விசாரணை

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உடற் காயங்களுடன் கிடந்த ஆணின் சடலத்தை மீட்டு  காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image
Updated On :5 மே 2023, 3:51 am

DIN

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உடற் காயங்களுடன் கிடந்த ஆணின் சடலத்தை மீட்டு  காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

துறையூர்- நாமக்கல், முசிறி செல்லும் சாலையில் துறையூர் அடுத்துள்ள ( கொத்தம்பட்டிக்கு முன்பாக) பெரிய பாலத்திற்கு கீழ் ஜீன்ஸ் மற்றும் வெளிர் நிற சட்டை அணிந்த சுமார் 40 வயதிருக்கக் கூடிய ஆண் ஒருவரின் சடலம் தலை மற்றும் உடற்காயங்களுடன் கவிழ்ந்த நிலையில் கிடந்தது. ஜீன்ஸ் இறந்தவரின் தொடைக்கு கீழே இறங்கி இருந்தது. 

Story image

தகவலறிந்து துறையூர் காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.