ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம்: இன்று 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :6 மே 2023, 9:18 am

DIN

தமிழகத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுகிறது.

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நாளை உருவாகும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை மறுநாள் உருவாகும் எனத் தெரிவித்துள்ளது. 

நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 9-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும்.

மே 6(இன்று) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.