‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

பிளஸ் 2 தேர்வில் 600 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாணவி சாதனை!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:26 pm IST

திண்டுக்கல்: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாணவி ச.நந்தினி சாதனைப் படைத்தார்.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இத்தேர்வில் 93.77 சதவீத தேர்ச்சியுடன் திண்டுக்கல் மாவட்டம் 21ஆவது இடத்தை பிடித்தது. இம் மாவட்டத்திலுள்ள 12 அரசுப் பள்ளிகள் உள்பட 67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளன. 

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 6 பாடங்களிலும் முழு  மதிப்பெண்கள் வீதம் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சதானை படைத்துள்ளார். திண்டுக்கல் நகால் நகரிலுள்ள அண்ணாமலையார் மில்ஸ் அரசு உதவிப் பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி நந்தினி, தமிழ், ஆங்கிலம், பொருளியியல், வணிகவியல், கணக்கு பதிவியல், கணினி பயன்பாடு ஆகிய படங்களில் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

600க்கு 600 மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ள மாணவி நந்தினி, தனது பெற்றோர் சரவணக்குமார், பானுப்பிரியா ஆகியோருடன் நாகல்நகர் பொன்சீனிவாசன் நகரில் வசித்து வருகிறார். சரவணக்குமார் தச்சுத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். மாணவிக்கு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சக மாணவிகள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், பொதுமக்களும் பாராட்டுத் தெரிவித்தனர்.

மாணவி நந்தினி கூறுகையில், எதிர்காலத்தில் ஆடிட்டராக உயர வேண்டும். பிறரிடம் வேலை கேட்டு செல்வதை விட, நானே சொந்தக்காலில்  நிற்க வேண்டும் என்றும், பிறருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஆடிட்டர் தொழிலில் சாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.