தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது!

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் தேர்வுகள் திங்கள்கிழமை(மே 8) வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளிய
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் தேர்வுகள் திங்கள்கிழமை(மே 8) வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 8,36, 593 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களது தேர்வு முடிவுகள் இன்று திங்கள்கிழமை வெளியானது.

அதன்படி, தமிழ்நாட்டில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 7,55,451 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,05,753(96.38 சதவீதம்) மாணவர்கள் 3,49,697(91.45 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர்கள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி ஜசதவீதம் 93.76 சதவீகமாக இருந்த நிலையில், இந்தாண்டு 94.30 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சியில் முதல் மூன்று இடங்களை விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் மாவட்டங்கள் பெற்றுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் தேர்ச்சியுடன் முதலிடத்திலும், திருப்பூர் மாவட்டம் 97.79 சதவீதம், பெரம்பூர் மாவட்டம் 97.59 சசவீதம் தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. 

ராணிப்பேட்டடை மாவட்டம் 87.30 சதவீதம் தேர்ச்சியுடன் கடைசி இடத்தில் உள்ளது. அரசுப்பள்ளி தேர்ச்சி விகிதம் 89.80 சதவீதமாக உள்ளது. 326 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 

புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 92.67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரியில் அரசுப்பள்ளி மாணவர்கள் 85.38 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்களில் மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவிட்டு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். 

மாணவர்கள் உறுதிமொழி படிவத்தில் அளித்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக வரும்.

முக்கிய பாடங்களில் 100 சதவீதம் மதிப்பெண்கள்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை

தமிழ் பாடத்தில் 2 பேர், ஆங்கிலம் 15 பேர், இயற்பியல் 812, வேதியியல் 3909, உயிரியல் 1494, கணிதம் 690, தாவரவியல் 340, விலங்கியல் 154, கணினி அறிவியல் 4618, வணிகவியல் 5678, கணக்குப் பதிவியல் 6573, பொருளியல் 1760, கணினிப் பயன்பாடுகள் 4051, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 1334 பேர் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கடந்த மே 2022 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 23,957. இந்தாண்டு மார்ச், ஏப்ரல் 2023 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 32,501 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com