தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் ரூ.66 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரனார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் ஆகியோரின் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, உத்தமத் தியாகி ஈரோடு ஈஸ்வரன் மற்றும் முன்னாள் முதல்வர் டாக்டர்.ப.சுப்பராயன் ஆகியோருக்கு ரூ.5.10 கோடிமதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 10) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ.சிதம்பரனார், மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்,
புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் ஆகியோருக்கு ரூ.66 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைகளை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் உத்தமத் தியாகி ஈரோடு ஈஸ்வரன், நாமக்கல் மாவட்டத்தில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர்.ப.சுப்பராயனுக்கு ரூ.5 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு. இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வனத் துறை சாா்பில் 2 ஒப்பந்தங்கள் கையொப்பம்

தொகுதி மறுவரையறைக்கு முன்பே மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கம்? - மத்திய அரசு பரிசீலனை

காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
ரூ.228 கோடி வங்கி மோசடி வழக்கு: அனில் அம்பானி மகனிடம் ஆறரை மணி நேரம் சிபிஐ விசாரணை
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

