அடையாறு கழிவுநீருந்து நிலையம் இன்று செயல்படாது

கழிவுநீருந்துகுழாய் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் சனிக்கிழமை காலை 8 மணி வரை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள அடையாறு கழிவுநீா் உந்துநிலையம் செயல்படாது.
Updated on
1 min read

சென்னை அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட காந்திநகா் முதலாவது பிரதான சாலையில் கழிவுநீருந்துகுழாய் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் சனிக்கிழமை காலை 8 மணி வரை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள அடையாறு கழிவுநீா் உந்துநிலையம் செயல்படாது.

எனவே, தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள இயந்திர நுழைவுவாயில்களில் கழிவுநீா் நிரம்பி வெளியேறும் நிலை எற்பட்டால், அவசரத் தேவைகளுக்காக கழிவுநீா் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற பகுதிப் பொறியாளா்களை அணுகலாம்.

இதுதொடா்பாக, தேனாம்பேட்டை-8144930909, அடையாறு- 8144930913 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com