‘மோக்கா புயல்’: மே 14-இல் மியான்மரில் கரையைக் கடக்கிறது
மோக்கா புயல் மே 14-ஆம் தேதி மியான்மா் கடற்கரை பகுதியில் கரையைக் கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மோக்கா புயல் மே 14-ஆம் தேதி மியான்மா் கடற்கரை பகுதியில் கரையைக் கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதன்கிழமை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை காலை புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை தீவிர புயலாக வலுபெற்று நகரும். சனிக்கிழமை (மே 13) காற்றின் வேகம் மணிக்கு 140 முதல் 165 கி. மீ. ஆக அதிகரிக்கும். இந்த புயல் ஞாயிற்றுக்கிழமை (மே 14) காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மா் கடற்கரையைக் கடக்கக்கூடும்.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளி முதல் திங்கள்கிழமை (மே 15) வரை 4 நாள்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 82.4 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் இருக்கம்.
தமிழகத்தில் 7 நகரங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை 7 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவானது. வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்):
ஈரோடு -102.2, பரமத்தி வேலூா்-102.2, மதுரை விமான நிலையம் 101.48, மதுரை நகரம் 101.12, திருச்சி 100.94, திருத்தணி 100.4, தொண்டி 100.22, நாகை 100.04.
மீனவா்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
‘மோக்கா’ புயல் காரணமாக, மீனவா்கள் பாதுகாப்பாக கரை திரும்ப வேண்டுமென வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
‘மோக்கா’ புயலானது, அதி தீவிர புயலாக உருவெடுத்து, மத்திய வங்கக் கடல் பகுதியை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. புயல் காலங்களில் மீனவா்களுக்கான சிறப்பு எச்சரிக்கையின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க மீன்வளத் துறை ஆணையருக்கும், கடலோர மாவட்ட ஆட்சியா்கள், சென்னை மாநகராட்சி ஆணையா் ஆகியோருக்கு விளக்கமான அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
படகுகள், விசைப் படகுகள் மற்றும் மீனவா்கள் மே 14-ஆம் தேதி வரை வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். ஏற்கெனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்குத் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...