3 முறை என்னை வெற்றி பெற வைத்தவர்கள் கொளத்தூர் மக்கள்: முதல்வர் ஸ்டாலின்
3 முறை என்னை வெற்றி பெற வைத்தவர்கள் கொளத்தூர் மக்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


3 முறை என்னை வெற்றி பெற வைத்தவர்கள் கொளத்தூர் மக்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், வில்லிவாக்கம் சந்திக்கடவு எண்.1-க்கு மாற்றாக வடக்கில் கொளத்தூர் பிரதான சாலையையும் தெற்கில் ஐ.சி.எப். சாலையையும் இணைக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ள மேயர் சிட்டிபாபு மேம்பாலத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை, தமிழ்நாட்டு மக்களுக்குரிய வகையில் அனைவருக்குமான முதல்வர் என்கின்ற அந்த பொறுப்பில் நான் இருந்தாலும், நான் முதல்வராக அந்த பொறுப்புக்கு வருவதற்கு காரணமாக இருந்த கொளத்தூர் தொகுதி மக்களாகிய நீங்கள் அளித்த மகத்தான வெற்றிதான். ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, ஹாட்ரிக் அடிக்கக்கூடிய வகையில் மூன்று முறை தொடர்ச்சியாக, என்னை வெற்றி பெற வைத்திருக்கக்கூடியவர்கள் நீங்கள் தான். அதில் இரண்டு முறை எதிர்க்கட்சி வரிசையிலே அமர்ந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். அதைத் தொடர்ந்து என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையின் காரணமாக, மீண்டும் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுத்து என்னை முதல்வராகக்கூடிய வாய்ப்பையும் உருவாக்கி தந்திருக்கிறீர்கள்.
முதல்வராக பொறுப்பேற்றதற்கு பின்னால், தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு சென்று பல பணிகளை செய்து, ஆய்வுகளை செய்து, திட்டங்களைத் தொடங்கி வைத்து, அந்த பணிகளை எல்லாம் தொடர்ந்து நான் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். அதை நீங்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், படித்துக் கொண்டிருக்கிறீர்கள். கொளத்தூர் தொகுதிக்கு வரும்போது, கடமைகளை நிறைவுசெய்துவிட்டு, ஒரு வீட்டிற்குள்ளே நுழைவது போல எனது வீட்டிற்குள்ளே நுழைவது போல, நிம்மதியை, ஒரு மனநிறைவை, மகிழ்ச்சியை, பூரிப்பை, புலங்காகித உணர்வை என்னையும் அறியாமல் நான் பெற்றுக்கொண்டிருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரைக்கும், நான் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை சந்திக்கக்கூடியவன் அல்ல. அப்போது மட்டும் உங்களையெல்லாம் சந்தித்து பேசுபவனல்ல. நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். எதிர்க்கட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில், “பேசலாம் வாங்க” என்ற தலைப்பில் நம்முடைய தொகுதி முழுவதும், அனைத்து வட்டங்களிலும், தொகுதி மக்களுடைய தேவைகள் என்ன? பிரச்னைகள் என்ன? என்பதை நேரடியாக மக்களிடத்தில் கேட்க வேண்டும் என்று முடிவு செய்து, “பேசலாம் வாங்க” என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்தினோம்.
அதையெல்லாம், அரசு அதிகாரிகளிடம் கொண்டு சென்று முடிந்த அளவிற்கு எல்லாவற்றையும் நிறைவேற்றும் வாய்ப்பில்லை. அதில் எதை, எதையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அந்த அதிகாரிகளை பயன்படுத்தி அந்த நிகழ்ச்சிகளை நாம் நிறைவேற்றினோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...