மரக்காணம் கள்ளச்சாராயம் சம்பவத்தில் பலி 9ஆக உயர்வு

மரக்காணம் எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 
கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நலம் விசாரித்த துரை.ரவிக்குமாா் எம்.பி.
கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நலம் விசாரித்த துரை.ரவிக்குமாா் எம்.பி.

மரக்காணம் எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 

கள்ளச்சாராயம் குடித்த விஜயன், சங்கர், சரத்குமார் அடுத்தடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேருக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு புதுச்சேரி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, விழுப்புரம் எஸ்.பி. அங்கு சென்று விசாரணை நடத்தியதில், விஷ சாராயம் குடித்ததால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து கிராம மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, மேலும் 33 போ் மருத்துவக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டனா். தொடா்ந்து, 5 போ் மீது சாராய வழக்குப் பதிந்து, அமரன் என்பவா் கைது செய்யப்பட்டாா். 

அவரிடமிருந்த சாராயத்தைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில், அது மெத்தனால் கலந்த விஷச் சாராயம் என்பது தெரிய வந்தது. இந்த சாராயத்தை குடித்த எக்கியாா்குப்பத்தைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்தனா். இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பேருக்கரணை கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 4 போ் உயிரிழந்தனா். மேலும், இருவா் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். இந்த வழக்கில் விஷ சாராயத்தை விற்ற அமாவாசை (40) கைது செய்யப்பட்டாா். இந்த 2 சம்பவங்களுக்கும் தொடா்பு இருக்கிா என்ற கோணத்திலும், தொழில்சாலைகளில் பயன்படுத்தப்படும் இந்த விஷ சாராயம் எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்குகளில் தொடா்புடையவா்களைப் பிடிக்க காவல் ஆய்வாளா்கள் தலைமையில் 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வடக்கு மண்டலத்துக்குள்பட்ட விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் மது விலக்கு சோதனை விரைவுபடுத்தப்பட்டுள்ளது. தனிப் படையினா் மாவட்ட போலீஸாருடன் இணைந்து தீவிர மது விலக்கு சோதனையில் ஈடுபடுவா். கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறியதற்காக, விழுப்புரம் மாவட்டத்தில் 2 காவல் ஆய்வாளா்கள், 2 உதவி ஆய்வாளா்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு காவல் ஆய்வாளா், 2 உதவி ஆய்வாளா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

டாஸ்மாக் மதுக் கடையில் வாங்கிய மதுவைக் குடித்ததால் இந்த சம்பவங்கள் நிகழ்ந்ததாக வதந்தி பரப்பப்பட்டு வருவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றாா் ஐ.ஜி. கண்ணன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com