
தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் பதிவாகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக வேலூர் மற்றும் கரூர் பரமத்திவேலூரில் 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
இதேபோன்று, திருத்தணி, திருப்பத்தூரில் தலா 103, ஈரோடு, மதுரை, திருச்சியில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டை, சேலத்தில் தலா 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.