டாஸ்மாக்கில் மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: வானதி சீனிவாசன் பேட்டி

டாஸ்மாக்கில் மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். டாஸ்மாக்கில் மது குடித்து இறக்கும் பொழுது இழப்பீடு தர வேண்டும்
டாஸ்மாக்கில் மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: வானதி சீனிவாசன் பேட்டி
Published on
Updated on
1 min read


கோவை: டாஸ்மாக்கில் மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். டாஸ்மாக்கில் மது குடித்து இறக்கும் பொழுது இழப்பீடு தர வேண்டும் என்று பாஜக கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,  தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் சாவுகள் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.

மதுவிலக்கு ஏன் அமல்படுத்தவில்லை என்ற கேள்விக்கு அரசாங்கம் சொல்லும் ஒரே பதில் கள்ளச்சாராயம். ஆனால் கள்ளச்சாராயத்தால் சாவுகள் நடைபெறுகிறது. இதற்கு அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். எந்த அரசியல் கட்சியினர் இதில் செயல்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளுங்கட்சி ஆதரவோடு கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது. கோவையில் புதிய சாலைகளை கண்ணில் பார்க்க முடியவில்லை என்று உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் விமானத்தில் கோரிக்கை வைத்தேன். என் முன்னே சாலைகள் சரி செய்ய அதிகாரிகளிடம் பேசினார்.

காங்கிரஸ் கட்சியை நம்பி வருவதற்கு எந்தவொரு அரசியல் கட்சியும் தயாராக இல்லை. மேடைக்கு செல்வார்கள் ஆனால் தேர்தல் களம் என்று வந்து விட்டால் நடப்பது வேறு. 

கர்நாடகா வெற்றியை வைத்து கனவு காண்கிறார்கள். பேருக்காக கட்சியை நடத்துபவர்களை கூட்டிக் கொண்டு வந்து வைத்தால் கூட அடுத்த முறை மோடி பிரதமர் ஆவதை யாராலும்  தடுக்க முடியாது. 

நாட்டில் இருக்கும் 95 சதவீத மக்களுக்கு ரூ.2,000 நோட்டால் பிரச்னை இல்லை. ரூ.2,000 நோட்டு எங்கெங்கு இருந்து வருகிறது என்பதை கண்காணித்தாலே நடவடிக்கை எடுப்பது சுலபம்.

ரூ.2,000 நோட்டை கடைக்காரர்களோ, வியாபாரிகளோ வாங்க மறுத்தால், வேண்டுமென்றே அலைக்கழித்தால் நடவடிக்கை எடுக்கலாம். 

கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் தருகிறார்கள். நல்லச்சாராயம் குடித்தும் பலர் இறக்கின்றனர். அதனால் மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதன் மூலம் உயிரிழப்பு ஏற்படும் பொழுது இழப்பீடு தர வேண்டும்.

மேலும், அமைச்சர் எதற்கெடுத்தாலும் ஆதாரம் கொடுங்கள் என்கிறார். நானே டாஸ்மாக் கடைக்கு போய் தான் ஆதாரம் கொண்டு வரணும் என்று வானதி சீனிவாசன் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com