6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாவட்ட தலைநகரங்களில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :29 மே 2023, 6:47 am

DIN

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் வரையில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்தும் தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தமிழ்நாடு அரசைக் கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மதுரை, சேலம், புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், கோவையில் எஸ்.பி.வேலுமணி, புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.