வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

உலக முழுவதும் இறந்தவர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய நாள் கல்லறை திருநாளாக கிறிஸ்துவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

News image
வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள்
Updated On :2 நவம்பர் 2023, 3:27 am

DIN

உலக முழுவதும் இறந்தவர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய நாள் கல்லறை திருநாளாக கிறிஸ்துவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

கல்லறைத் திருநாளையொட்டி உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது. திருத்தல அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Story image

கல்லறை திருநாள் நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்துவர்கள், பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்கள் மற்றும் தங்களுடைய உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்தனர். தொடர்ந்து, கல்லறைகளில் உணவுப்பண்டங்களை படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Story image

பின்னர், இஸ்ரேல்-பாலஸ்தீன இடையே நடைபெறும் போரில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் 2004 -ஆம் ஆண்டு சுனாமி பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லறைத் திருநாள் வழிபாடு நடைபெற்றது. 

Story image

வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த கல்லறை திருநாளில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் பங்கேற்றனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.