தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு செக்காரக்குடி தரைப்பாலம் உடைப்பு: 10 கிராமங்கள் போக்குவரத்து துண்டிப்பு

செக்காரக்குடி தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  
கனமழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட செக்காரக்குடி தற்காலிக தரைப்பாலம்
கனமழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட செக்காரக்குடி தற்காலிக தரைப்பாலம்


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழைக்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் செக்காரக்குடி தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதில் மணியாச்சி பகுதியில் 63 மில்லி மீட்டர் மழையும், ஓட்டப்பிடாரம் பகுதியில் அதிகபட்சமாக 80 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியது. இதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தூத்துக்குடியில் இருந்து பொட்டலூரணி வழியாக செக்காரக்குடி செல்லும் வழியில்  நெடுஞ்சாலை துறை சார்பில்  உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. 

இதனால்  அதன் அருகே  தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. 

இதன்காரணமாக, செக்காரக்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் செக்காரக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட நான்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி உத்தரவிட்டார். 

இதையடுத்து, பாலத்தை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com