திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்கள் கடத்தல்: வடமாநில இளைஞர்கள் 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதிகளில் திமுக கொடி காட்டிய காரில், ரூ.3 லட்சம் மதிப்பிலான 700 கிலோ போதைப்பொருள்களை கடத்திய வந்த ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரூ.3 லட்சம் மதிப்பிலான 700 கிலோ போதைப்பொருள்களை கடத்திய வந்த ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரூ.3 லட்சம் மதிப்பிலான 700 கிலோ போதைப்பொருள்களை கடத்திய வந்த ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதிகளில் திமுக கொடி கட்டிய காரில், ரூ.3 லட்சம் மதிப்பிலான 700 கிலோ போதைப்பொருள்களை கடத்திய வந்த ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதிகளுக்கு, ஹான்ஸ், பான்மாசலா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பனைக்காக கொண்டு வருவதாக நடுக்காவோி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மனத்திடல் பகுதியில் வாகன சோதனையின் போது திமுக கொடி கட்டிய ஃபார்ச்சூனர் கார் ஒன்று‌ வந்துள்ளது. போலீசார் காரை சோதனை செய்வதற்காக நிறுத்தியுள்ளனர். ஆனால் காரில் இருந்த இருவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால் சந்தகேமடைந்த போலீசார், காரை சோதனை செய்தனர். அப்போது, கார் சீட்டின் அடியில் சுமார் 700 கிலோ ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் ஜின்பூர் தாலுகா வஸ்னாராம் (28), சிம்பா ராம் (25) என்பது தெரியவந்து. 

மேலும், இவர்கள் எந்த மாநிலத்திற்கு ஹான்ஸ் எடுத்துச் சென்றாலும், அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியின் கொடியை பயன்படுத்தி விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த கார் மன்னார்குடியை சேர்ந்த ஆளும் கட்சி பிரமுகரின் கார் என்பதும், அது யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com