மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கனமழை காரணமாக நாளை (நவ. 14) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :13 நவம்பர் 2023, 4:10 pm


கனமழை காரணமாக நாளை (நவ. 14) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். 

புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. 24 மணிநேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், டெல்டா மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் நாளை (நவ. 14) விடுமுறை அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.