மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

திடீரென தீப்பிடித்து எரிந்த 3 லாரிகள்: காவல் துறையினர் விசாரணை

நாமக்கல்லில் திங்கள்கிழமை நள்ளிரவு பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று லாரிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. 

News image
Updated On :14 நவம்பர் 2023, 3:27 am

நாமக்கல்: நாமக்கல்லில் திங்கள்கிழமை நள்ளிரவு பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று லாரிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. 

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூர் அருகே தனியார் டயர் நிறுவனம் உள்ளது. அதன் அருகிலேயே பெட்ரோல் பங்க் ஒன்றும் உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒரு டேங்கர் லாரி, இரண்டு சரக்கு லாரிகள் என மூன்று லாரிகள் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Story image

அவற்றில் ஒரு லாரியில் முழுமையாக காட்டன் துணிகள் இருந்தன. மற்ற இரு லாரிகளில் பொருள்கள் எதுவும் இல்லை.

இந்த நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென மூன்று லாரிகளும் தீப்பிடித்து எரிய தொடங்கின. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

Story image

நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். பெட்ரோல் பங்க் அருகில் இருந்ததால் அசம்பாவிதம் ஏற்படாமல்  தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் காவல் துறையினர் அங்கு விசாரணை மேற்கொண்டனர். பட்டாசு வெடித்ததில் தீப்பொறிகள் ஏதேனும் விழுந்து தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.