கோவை மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை வரும் 18ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மண்சரிவால் ரயில் பாதையில் ஏற்பட்ட பாதிப்புகள் சீரமைக்கப்படாததால் 18ஆம் தேதி வரை ரயில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், மலை ரயில் பாதையில் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.
மலை ரயில் பாதை அமைந்துள்ள கல்லார், ஆடர்லி, ஹில்கிரோ உள்ளிட்ட பகுதிகளில் தொடர் பருவ மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் 18ஆம் தேதி வரை உதகை மலை ரயில் சேவை நிறுத்திவைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

ஆடிஷன் விடியோக்களை ரசிகர்களுக்காக பகிர்ந்த நடிகை காவ்யா அறிவுமணி!

சூர்யா - 50! இயக்குநர் நெல்சனுடன் பேச்சுவார்த்தை?

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



