தாராபுரம் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு நிவாரணம்!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு நிவாரணமாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு நிவாரணமாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மணக்கடவு கிராமம், லங்காட்டுப்பிரிவு
என்ற இடத்தில் இன்று (நவ. 16) மாலை டேங்கர் லாரியும், நான்கு சக்கர வானமும் நேருக்குநேர் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.
பாலகிருஷ்ணன், மனைவி செல்வி, தமிழ்மணி, சித்ரா, கலாராணி உள்ளிட்ட 5 பேர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த
வேதனையடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின்
உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்
கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...