25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:21 am

DIN

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று (நவ. 15) உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (நவ.16) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, 18 ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையை மோங்க்லா · கேப்புபாராவிற்கு இடையே கடக்கக்கூடும்.

மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழையும் நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.