9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

‘மிதிலி’ புயல் எதிரொலியாக தமிழகத்தில் சென்னை, கடலூர், எண்ணூர், பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
பாம்பன் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்ட இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.
பாம்பன் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்ட இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.


‘மிதிலி’ புயல் எதிரொலியாக தமிழகத்தில் சென்னை, கடலூர், எண்ணூர், பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

வடமேற்கு வங்க கடலில் புதிய புயல் மிதிலி உருவாகி உள்ளது. இந்த புயல் வடக்கு- வடகிழக்கு திசையில் நகா்ந்து சனிக்கிழமை (நவ. 18) அதிகாலை வங்கதேச கடற்கரையையொட்டி நகா்ந்து மோங்லா-கேப்புபாராவு பகுதிகளுக்கு இடையே கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக சென்னை, எண்ணூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுரை வழங்கப்பட்டது. 

இதனால் வெள்ளிக்கிழமை (நவ. 17) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களிலும், ஞாயிற்றுக்கிழமை (நவ. 19) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடமேற்கு, வடகிழக்கு வங்கக் கடல், மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ. 17) சூறாவளிக் காற்று மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடமேற்கு வங்கக்கடலில் மிதிலி புயல் உருவானதை குறிக்கும் வகையில் தமிழகத்தில் 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது. 

அதன்படி, சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, நாகை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

மீனவா்கள் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவா்கள் தங்களது படகுகளை துறைமுகத்திலும், பாதுகாப்பான இடங்களிலும் நிறுத்தி வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com