சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காரைக்கால் மீனவர்கள் 22 பேர் கைது

எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :18 நவம்பர் 2023, 9:14 am

DIN

எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. 

எல்லைகளில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில் இன்று காங்கேசன் - பருத்தித் துறைக்கு இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இவர்கள் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவர்களுடன் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.