விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வதந்திகளை நம்ப வேண்டாம்: விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக அறிக்கை!

விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தேமுதிக இன்று(திங்கள்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளது. 

News image

விஜயகாந்த்

Updated On :20 நவம்பர் 2023, 8:02 am

விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தேமுதிக இன்று(திங்கள்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளது. 

உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் வழக்கமான பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில் தேமுதிக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்தி. இதுபோன்ற வதந்திகளை நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.