15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னையில் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறி சென்னையில் சுமார் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் மற்றும் வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அஷ்ரக் கார்க் ஐபிஎஸ் உத்தரவிட்டு உள்ளனர். 

கோயம்பேடு, மதுரவாயல், விருகம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஆறு உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் உள்பட 14 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த  நிலையில் மேலும் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பது காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com