தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் பள்ளி குடிநீர்த் தொட்டி இடிப்பு!

காஞ்சிபுரம் அருகே மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது.

News image
Updated On :22 நவம்பர் 2023, 3:47 am

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் அரசுப் பள்ளியின் குடிநீர்த் தொட்டி இடித்து அகற்றப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த திருவந்தவார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு பள்ளி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காவல்துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கவில்லை என்றும், அழுகிய முட்டையை காகம் கொண்டு வந்து தொட்டியில் போட்டதால் துர்நாற்றம் வீசுவதாக விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், பள்ளியின் குடிநீர்த் தொட்டியை ஜேசிபி இயந்திரம் மூலம் புதன்கிழமை காலை இடித்து அகற்றியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.