மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து!

சேலம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

News image
சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து
Updated On :22 நவம்பர் 2023, 4:47 am

DIN

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

சேலம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சேலம் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அவசர சிகிச்சை  மேல் மாடியில் உள்ள எலும்பு முட்டு அறுவை சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவில் இன்று காலை திடீரென தீப்பற்றியது.

பயங்கர புகையுடன் தீ பரவியதால் பணியில் இருந்த செவிலியர்கள், நோயாளிகள்  அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Story image

இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு குழுவினர் உள்நோயாளிகள் அனைவரையும் அதிரடியாக வெளியேற்றி அவசர அவசரமாக வேறு வார்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அறை முழுவதும் புகைமூட்டம் காணப்படுவதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.

எலும்பு முட்டு சிகிச்சை பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகள் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நோயாளிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்

Story image

தீ விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் உள்ள குளிர்சாதனத்திலிருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.