அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை டிச.4 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனா். அவரை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்த பிறகு, ஆக.12-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
அதன் பிறகான நீதிமன்றக் காவல் கடந்த அக். 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அவா் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் ஆஜா்படுத்தப்பட்டாா். தொடா்ந்து, அவரது நீதிமன்றக் காவலை நவ. 22 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் காணொலி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜரானார்.
இந்த நிலையில், அவரது நீதிமன்றக் காவலை டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டித்து முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டாா்.
இதையும் படிக்க: நவ.26-ல் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பு!
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பது இது 11-ஆவது முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆற்று மணல் திருட்டு: இருவா் மீது வழக்கு

ஏா் பின்னது உலகம்...

ஜூன் 17-இல் புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்! முதல்வா் என்.ரங்கசாமி

தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



