கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

யு வடிவ மேம்பாலம் திறப்பு: வாகன நெரிசலுக்கு விடைகொடுக்கும் வேளச்சேரி

யு வடிவ மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

News image
Updated On :23 நவம்பர் 2023, 11:50 am

DIN

சென்னை, ராஜீவ் காந்தி சாலை, இந்திரா நகர் சந்திப்பில் ரூ.18.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள யு வடிவ மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (23.11.2023) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, ராஜீவ் காந்தி சாலை (ஓஎம்ஆர்), இந்திரா நகர் சந்திப்பில் 18.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள யு வடிவ மேம்பாலத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதையும் படிக்க.. மூடப்படும் கேட்.. கிரீடத்தை இழக்கப்போகிறதா சென்னை?  

பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில்,  வணிகம், சுற்றுலா, போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைத்தல் போன்ற முக்கியப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாடு அரசு,  நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.

இந்திரா நகர் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள யு வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தல் ராஜீவ் காந்தி சாலையில் (ஓ.எம்.ஆர்), இந்திரா நகர் சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சந்திப்பில் அமைந்துள்ள இரண்டு போக்குவரத்து சமிக்ஞைகளில் தற்போது வாகனங்கள் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில், மேற்கண்ட இந்திரா நகர் சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சந்திப்பு ஆகிய இரண்டு சந்திப்புகளிலும் யு வடிவ மேம்பாலங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, இந்திரா நகர் மற்றும் டைடல் பார்க் சந்திப்புகளில் யு வடிவ மேம்பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து உள் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.108.13 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இப்பணிகளுள் ஒன்றான 18.15 கோடி செலவில் இந்திரா நகர் யு வடிவ மேம்பாலப் பணிகள் முழுவதும் தற்போது முடிக்கப்பட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார்.

இந்திரா நகர் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள 237 மீட்டர் நீளமுள்ள இப்பாலம், 12.5 மீட்டர் நீளமுள்ள 19 கண்களை கொண்டதாகும். ராஜீவ் காந்தி சாலையின் வலது புறத்தில் இந்த பாலத்தின் ஏறு சாய்தளம் 120 மீட்டர் நீளத்திற்கும், இடது புறத்தில் இறங்கு சாய்தளம் 120 மீட்டர் நீளத்திற்கும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திரா நகர்  யு வடிவ மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுவதால், சோழிங்கநல்லூர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் இந்திரா நகர் மேம்பாலம் வழியாக ஏறி யு திருப்பம் எடுத்து, இந்திரா நகர் வழியாக அடையாறு மற்றும் திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி விரைந்து செல்ல இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.