

ஒரு மாவட்டத்திலிருந்து 10 ஆயிரம் நபர்களை திமுக மாநில மாநாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தியாகராய நகரிலுள்ள விடுதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (நவ. 26) காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், எதிர்வரும் மக்களவைத் தோ்தலையொட்டி, வாக்குச் சாவடி பொறுப்பாளா்கள், உறுப்பினா்களின் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சேலத்தில் திமுக இளைஞரணியின் 2-ஆவது மாநில மாநாடு, டிச.17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதுகுறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இதில் மாவட்டச் செயலாளர்காளுக்கு மு.க. ஸ்டாலின் சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.
டிச. 17ஆம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டிற்கு ஒரு மாவட்டத்திலிருந்து 10 ஆயிரம் நபர்களை அழைத்து வர வேண்டும். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்தும் ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும். 5 லட்சம் பேர் கலந்துகொள்ளும் மாஅநாடாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் சிறப்பான மருத்துவ கட்டமைப்பைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் மருத்துவப் படிப்பை உறுதி செய்தது திமுக. நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டும் என்றால் 40 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும் என மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.