மகா தீபம்: மலையேற அனுமதிச்சீட்டு வாங்க குவிந்த பக்தர்கள்!

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்வில் மலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. 
மகா தீபம்: மலையேற அனுமதிச்சீட்டு வாங்க குவிந்த பக்தர்கள்!


கார்த்திகை திருநாளையொட்டி மகாதீபம் ஏற்றும் நிகழ்வில் மலைமீது ஏற இலவச அனுமதிச்சீட்டு பெற ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்வில் மலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. 

கார்த்திகை தீபத்தையொட்டி இன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மீது முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. 

மகா தீபம் ஏற்றும் நிகழ்வில் மலைமீது செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்படி மலைமீது செல்ல 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. உடல் தகுதிச் சான்று அளித்து, ஆதார் எண்ணை சமர்ப்பித்து மலையேறுவதற்கான அனுமதிச் சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் இலவச அனுமதிச்சீட்டை பெற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

கல்லூரி வளாக சுற்றுச்சுவரை தள்ளிவிட்டு கல்லூரி வளாகத்திற்குள் பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. ஒருசில பக்தர்கள் காயமடைந்தனர். 3 பெண்கள் மயக்கமடைந்ததாக கூறப்படும் நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் முயற்சித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com