கோவையில் பிரபல நகைக்கடையில் திருட்டு!

கோவையில் பிரபல நகைக்கடையில் திருட்டு!

கோவை மாவட்டத்தில் பிரபல நகைக்கடையில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Published on

கோவை மாவட்டத்தில் பிரபல நகைக்கடையில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை இயங்கி வருகின்றது. நான்கு தளங்களைக் கொண்ட இந்த நகைக்கடையில் தங்கம், வைரம் என பல்வேறு வகையான நகைகள் விற்பனைக்குப் பல பிரிவுகள் உள்ளன. நகைக்கடையின் முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் சுமார் 10 கிலோ நகைகள் திருடப்பட்டுள்ளன. 

தினமும்  நகைக்கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்றிரவு பணி முடிந்து ஊழியர்கள் வழக்கம் போல் கடையை மூடிவிட்டுச் சென்றுள்ளனர். தொடர்ந்து இன்று காலை கடையைத் திறந்துபார்க்கும்போது கடையிலிருந்த பொருள்கள் திருடு போனது தெரிய வந்தது. 

நகைக்கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். 

இந்த தகவலையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். 

மேலும், கொள்ளையர்களைப் பிடிப்பதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைத்து, தடயவியல் நிபுணர்கள் தடங்களைச் சேகரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com