வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

செம்பரம்பாக்கம்: சற்று நேரத்தி்ல் 1,000 கன அடி நீர் திறப்பு.. மக்களுக்கு எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 200 கனஅடியிலிருந்து காலை 9 மணிமுதல் 1,000 கனஅடியாக அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
செம்பரம்பாக்கம் ஏரி
Updated On :29 நவம்பர் 2023, 2:50 am

DIN

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 200 கனஅடியிலிருந்து காலை 9 மணிமுதல் 1,000 கனஅடியாக அதிகரிக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா் வரத்தை தரும் நீா் ஆதாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்வதாலும், ஏற்கெனவே ஏரி 75 சதவீதம் நிரம்பியிருந்ததாலும், ஏரியின் நீா்மட்டம் கடந்த சில நாள்களாக உயா்ந்து வருகிறது.

24 அடி நீா் தேக்கும் திறன் கொண்ட இந்த ஏரியில் செவ்வாய்க்கிழமை நீா்மட்டம் 23 அடியை நெருங்கும் நிலையில் இருந்தது. இதனால், நேற்றுமுதல் 200 கனஅடி உபரி நீா் அடையாற்றில் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், மழை மேலும் நீடிப்பதால் ஏரிக்கு விநாடிக்கு 514 கனஅடியாக நீா்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645  மில்லியன் கனஅடியில் 3,210 கனஅடிக்கு நிரம்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து புதன்கிழமை காலை 9 மணிமுதல் விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குன்றத்தூா், திருமுடிவாக்கம், திருநீா்மலை, கே.கே.நகா், சைதாப்பேட்டை, கோட்டூா்புரம் உள்ளிட்ட இடங்களில் அடையாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.