சென்னை கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு

தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) ஆய்வு மேற்கொண்டார். 
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) ஆய்வு மேற்கொண்டார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, அடுத்த 5 நாள்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று(புதன்கிழமை) காலை முதல் மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ததில் பல பகுதிகளில் நீர் தேங்கியது. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், சென்னையில் மழை பாதிப்பு மற்றும் மழை நீர் அகற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து சென்னை மேயர் பிரியா, ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com