மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது: அண்ணாமலை பேட்டி

மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது; அனுசரித்து செல்லும் பழக்கம் என்னிடம் எப்போதும் கிடையாது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது: அண்ணாமலை பேட்டி
Published on
Updated on
2 min read


கோவை: மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது; அனுசரித்து செல்லும் பழக்கம் என்னிடம் எப்போதும் கிடையாது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தில்லி செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை கோவை விமான நிலையம் வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,  எந்த நகரங்கள் தூய்மையாக இருக்கிறதோ, அங்கு சுற்றுலாத் துறை வளர்ந்திருக்கிறது எனவும், மத்திய அரசு தூய்மைக்கு முன்னிரிமை அளித்து வருவதால், தமிழக அரசு போட்டி போடாமல் இந்தியா திட்டமாக நினைத்து அதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

திமுக பொய் பேசுவதற்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாக தெரிவித்த அண்ணாமலை, கூட்டணி முறிவு குறித்து பாஜத தேசிய தலைமை என்னிடம் எந்த அறிக்கையும் கேட்கவில்லை, யாரிடமும் அறிக்கை கொடுக்கவும் இல்லை. என்னிடம் கேட்டால் பதிலளிப்பேன். இது கார்ப்பரேட் நிறுவனம் அல்ல என தெரிவித்தார்.  

தேர்தலுக்கு இன்னும் ஏழு, எட்டு மாதங்கள் இருக்கிறது, கட்சியை வலுப்படுத்துவதே எனது நோக்கம். கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் என தெரிவித்தார். 

அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமையும் போது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, பின்னடைவு எதுவும் ஏற்படாது என பதிலளித்தார். 

2024 தேர்தலுக்கு முழு உறுதியுடன் இருப்பதாகவும், தினமும் மக்களை சந்திப்பதாகவும், 2024 மக்களவைத்  தேர்தலில் வலுவான இடத்தை பிடிப்போம். 57 சதவிகித வாக்காளர்கள் 35 வயதுக்குள்ளானவர்கள். அவர்கள் இன்ஸ்டாவில் வாழ்கின்றனர் எனவும் தெரிவித்தார். இப்போது தொலைக்காட்சி, செய்தித்தாள் எல்லாம் யார் படிக்கின்றனர் எனவும், இளைஞர்கள் வேறு உலகத்தில் வாழ்கின்றனர்.

மக்களவைத் தேர்தலில் எத்தனை இடங்களில் கிடைக்கும் என்ற எண்ணிக்கையை சொல்ல விரும்பவில்லை எனவும், தேர்தல் நேரத்தில் இதுகுறித்து சொல்லப்படும். 

மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது, அரசியலில் பதவிக்காக வந்தவன் கிடையாது. எனக்கு என தனி உலகம் இருக்கின்றது. அதில் நான் வாழ்கின்றேன். அனுசரித்து செல்லும் பழக்கம் என்னிடம் எப்போதும் கிடையாது. என்னால் யாருக்காகவும் மாறமுடியாது. திமுக புகழ்பாடவே கம்யூனிஸ்ட் கட்சி இருக்கின்றது. கே.பாலகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு கரும்புள்ளி. கம்யூனிஸ்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரியாக இருக்கின்றனர். 

அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னதாக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் சொன்ன கருத்துக்கு, இன்னொரு முன்னாள் அமைச்சர் பதில் சொல்லி இருக்கிறார். அவர்களுக்குள் மாற்றி மாற்றி பதிலடி கொடுத்து கொள்கின்றனர்.  தமிழக பாஜக தவறான பாதையில் செல்கின்றது என யாராவது சொன்னால், அதற்கு நேர் எதிரான திசையில் கட்சி பயணிக்கும் என தெரிவித்தார்.

தமிழக பாஜக மீது அனைவருக்கும் கோபமாக இருக்கின்றனர். ஒரே ஒரு தேர்தல் பாஜகவிற்கு வந்தால் 25 சதவிகித வாக்கு சதவிதத்தை காட்டி, தமிழகத்தின் அரசியல் தலைகீழாக மாற்றிவிடும். இந்தியாவில் பாஜக மட்டும் தான் சுத்தமான கட்சியாக இருக்கின்றது.

அதிமுகவினரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள். 

பாஜக மாநிலத் தலைவராக இல்லாமல் இருந்தால், கட்சியில் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு ஆவேசமான அண்ணாமலை, பத்திரிகையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர், மரபை தாண்டினால் யாராக இருந்தாலும் விட மாட்டேன் என தெரிவித்த அண்ணாமலை, இன்றளவும் நான் விவசாயியாக இருக்கின்றேன். முழு நேர அரசியல்வாதி கிடையாது என தெரிவித்தார். 

கோவையில் அரசு நிலத்தை அபகரித்ததாக பாஜக மாவட்ட தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்திருப்பது குறித்து மாவட்ட தலைவர் பதில் அளிப்பார் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், தில்லியில் என்னை நாற்காலி போட்டு உட்கார வைத்து  கேள்வி கேட்கப் போகிறார்களா? தில்லி சென்றாலும் இப்படியே தான், போகாவிட்டாலும் இப்படித்தான்  இருப்பேன். 

என்னை எல்லாரும் எதிர்க்கிறார்கள், அதுதான் என் வளர்ச்சிக்கு காரணம் எனவும் இதை நான் மாற்றி கொள்ள விரும்பவில்லை எனவும் அரசியல் பல கோணங்கள் இருக்கும். நான் நேர்மையாக இருக்கின்றேன். 

தில்லி செல்வது வழக்கமான பணிக்காக, நடைபயணம் குறித்தும், நடை பயணத்தில் பங்கேற்க இருப்பவர்கள் குறித்தும் ஆலோசிப்பதற்காகவே செல்கிறேன். இது இரு வாரங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டது.

அதிமுகவை நான் ஏன் விமர்சிக்க வேண்டும்? நான் ஏன் கருத்து சொல்ல வேண்டும்? என்றவர், நான் நடைபயணத்தில் கவனம் செலுத்துகிறேன். கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் கருத்து சொல்வார்கள் என தெரிவித்தார்.

தனித்துப் போட்டி என்பதற்குள் செல்ல விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் நிறைய கட்சிகள் இருக்கின்றது. கூட்டணிக்கான காலமும் நேரமும் இருக்கிறது,  வெற்றி பெறுவதற்காக போட்டியிடுவோம், தமிழகத்தில் நிறைய இடங்களில் வெற்றிபெறுவோம். அதனால் தான் பிற கட்சிகள் பயந்து போய் இருக்கின்றன. இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவோம் என அண்ணாமலை தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com