அவதூறு பேச்சுக்கு பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு: முன்னாள் எம்எல்ஏவுக்கு நிபந்தனை

அவதூறு பேச்சுக்கு, பொதுக்கூட்டத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ குமரகுருவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்


சென்னை: அவதூறு பேச்சுக்கு, பொதுக்கூட்டத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ குமரகுருவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக புகார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், முன் ஜாமீன் கேட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான இரா. குமரகுரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 

மனுவை விசாரித்த நீதிபதி, தனது பேச்சுக்கு பொதுக்கூட்டம் நடத்தி அதில், குமரகுரு மன்னிப்புக் கேட்க வேண்டும். நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனையை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சாா்பில், முன்னாள் முதல்வா் அண்ணாவின் 115-ஆவது பிறந்த நாள் விழா, மதுரை மாநாட்டின் தீா்மானங்களின் சாராசம்சங்கள் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் மந்தவெளியில் நடந்தபோது, கூட்டத்தில் இரா.குமரகுரு பங்கேற்று பேசினாா்.

இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் குறித்து இரா.குமரகுரு அவதூறாக பேசியதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, தியாகதுருகம், சின்னசேலம், வரஞ்சரம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட 10 காவல் நிலையங்களிலும் இரா.குமரகுரு மீது திமுக சாா்பில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

வருத்தம்
பொதுக்கூட்டத்தில் நீட் தோ்வு பற்றி பேசியபோது தவறுதலாக ஒரு வாா்த்தையை கூறிவிட்டேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன் என தனது முகநூல் பக்கத்தில் இரா.குமரகுரு பதிவிட்டிருந்தார். இந்த நிலையில்தான், முன்ஜாமீன் வழக்கில், பொதுக்கூட்டம் நடத்தில் அதில் வருத்தம் தெரிவிக்குமாறு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com