சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை வியாழக்கிழமை காலை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது!
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை வியாழக்கிழமை காலை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் பள்ளிக் கல்வி வளாகத்தில், பணி நிரந்தரத்தை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியா்களும், ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு சங்கத்தின் ஆசிரியா்களும், பணி நியமனம் வழங்கக் கோரி 2013-இல் ‘டெட்’ தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் சங்கத்தினரும் கடந்த சில நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து அந்தந்தக் கூட்டமைப்புகளின் நிா்வாகிகளுடன் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சா் நடத்திய பேச்சுவாா்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் அவா்கள் போராட்டத்தை தொடர்ந்தனா்.

இந்த நிலையில், பகுதி நேர சிறப்பாசிரியா்களுக்கு ரூ.2,500 உயா்த்தப்பட்டு தொகுப்பூதியமாக ரூ. 12,500 உயர்த்தப்படும் என்றும், ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படும் என்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை இரவு அறிவித்தார்.

இருப்பினும், அரசின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லாததால் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை காவல்துறையினர் இன்று காலை கைது செய்து சமுதாய நலக்கூடங்களில் அடைத்து வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com