காவிரி நீர் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!

காவிரி விவகாரம் தொடர்பான தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 
காவிரி நீர் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!

காவிரி விவகாரம் தொடர்பான தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் இன்று(திங்கள்கிழமை) காலை 10 மணிக்குக் கூடியது. 

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார். இதன்படி காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அப்போது பேசிய முதல்வர், 'தமிழகத்துக்கு இதுவரை 9.19  டிஎம்சி தண்ணீர் வர வேண்டிய நிலையில் இதுவரை 2.18 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. 

தமிழகத்துக்கு கர்நாடக அரசு முறையாக தண்ணீர் திறக்கவில்லை. காவிரி ஆற்றில் செயற்கையான நெருக்கடியை கர்நாடகம் உருவாக்கி வருகிறது. காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்ட ஜூலை 17ஆம் தேதி முதல் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்' என்று பேசினார்.

இதையடுத்து தீர்மானத்தின் மீது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துப் பேசினார். 

இதையடுத்து, காவிரி நீர் தொடர்பான தனித் தீர்மானத்தை பாஜக தவிர்த்து மற்ற கட்சிகள் ஆதரித்த நிலையில் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, பாஜக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. 

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசிற்கு மத்திய அரசு உத்தரவிடக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com