இஸ்லாமிய சிறைக் கைதிகள் தீர்மானம்: அதிமுக வெளிநடப்பு!
இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று(திங்கள்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவையில் இன்று நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.
'இஸ்லாமிய மக்கள் மீது திடீர் பாசம் ஏன்? இதுதொடர்பான மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறது, ஆளுநரைச் சந்தித்து அதிமுக அழுத்தம் கொடுத்திருக்கலாமே?' என முதல்வர் கேள்வி எழுப்ப,
'இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, நீண்ட காலம் சிறையில் உள்ள பிற சமூக கைதிகளை விடுவிக்கவும் அதிமுக முயற்சிக்கும். பாபர் மசூதி இடிப்பு சமயத்தில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ அதிமுக அரசுதான் காரணம்' என்று பேசினார்.
காரசார விவாதத்தைத் தொடர்ந்து, தீர்மானம் குறித்து அதிமுகவினருக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...