பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தயாநிதி மாறனுக்கு வந்த போன் கால்.. ஓடிபி சொல்லாமலே ரூ.1 லட்சம் மோசடி

வங்கிக் கணக்கிலிருந்து ஓடிபி சொல்லாமலேயே வடமாநில கும்பல் ஒன்று கைவரிசைக் காட்டியிருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 அக்டோபர் 2023, 9:25 am

DIN

சென்னை: சென்னையில் வசித்து வரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் ஒருங்கிணைந்த வங்கிக் கணக்கிலிருந்து ஓடிபி சொல்லாமலேயே வடமாநில கும்பல் ஒன்று கைவரிசைக் காட்டியிருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக எம்.பி. தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு ஜிபே கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மோசடி நடந்திருப்பதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில், புதிய தொடர்பு எண் வந்ததும் எடுத்துப் பேசினோம். ஹிந்தியில் பேசிய நபர்கள் 3 முறை தொலைபேசியில் அழைத்தனர். அப்போது, எந்த ஓடிபி எண்ணும் சொல்லாமலேயே, வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தயாநிதி மாறனின் மனைவி மலேசியாவில் இருப்பதாகவும், அவருக்கு செல்போனில் இந்த அழைப்புகள் வந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

புதிய எண்ணிலிருந்து அழைத்தபோது, ஹிந்தியில் பேசிய நபர்கள் 3 முறை தொடர்ந்து அழைத்த பின், திடீரென ஒரே பரிவர்த்தனையில் ரூ.1 லட்சம் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் வங்கிக் கணக்கிலிருந்து, ஓடிபி எண் சொல்லாமலேயே, கைப்பேசி அழைப்பின் மூலமே  பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.