எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம்: அதிமுக வெளியேற்றம்

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். 
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம்: அதிமுக வெளியேற்றம்


சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். 

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

இந்த நிலையில், பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் தற்போது அமர்ந்துள்ள எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை, ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்கக்கோரி பத்து முறை கடிதம் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. 3 உறுப்பினர்களை நீக்கக்கோரிய கடிதம் மீதும் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என எப்பாடி பழனிசாமி பேசினார். 

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக, சட்டம் விதி என்ன சொல்கிறதோ அதன்படி தான் நடக்கிறேன். இந்த விவகாரத்தில் சட்டப்படியே நடக்கிறேன். வீம்புக்காக எதையும் செய்யவில்லை. ஒருவர் எந்த சின்னத்தில் வென்று பேரவைக்கு வருகிறாரோ அதே சின்னத்தில்தான் கடைசி வரை பார்ப்பேன் என விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம் என இபிஎஸ் தொடர்ந்து பேசி வந்தார். அப்போது, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேச முற்பட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தர்னாவில் ஈடுபட்டதை அடுத்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு அப்பாவு உத்தரவிட்டதை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com