டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

காவிரி கூட்டத்தில் விநாடிக்கு 16,000 கன அடி நீர் திறக்கக் கோரிக்கை: துரைமுருகன்

தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை(அக். 13) நடைபெற உள்ளது.

News image
அமைச்சர் துரைமுருகன்
Updated On :2 பிப்ரவரி 2024, 3:08 am

DIN

தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை(அக். 13) நடைபெற உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு முறையாக காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் நேற்று (அக். 11) நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டுக்கு அக்.30-ம் தேதி வரை விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று கூறியது.

இந்நிலையில் இது தொடர்பான காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை(அக். 13) தில்லியில் கூடுகிறது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை செயல்படுத்த ஆணையம் உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் திறக்க கோரிக்கை விடப்படும். கடந்த 18 நாட்களில் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நமக்கு 4.21 டி.எம்.சி தண்ணீர் கிடைத்துள்ளது. மேலாண்மை ஆணையம் கூறியதை ஏற்று கர்நாடகம் தற்போது தண்ணீர் திறந்து வருகிறது' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.