மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல்: மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை; கணவர் படுகாயம்

பரமத்தி வேலூர் அருகே தோட்டத்தில் இருந்த மூதாட்டி கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட நிலையில், அவரது கணவர் படுகாயமடைந்துள்ளார்.

News image
Updated On :12 அக்டோபர் 2023, 6:05 am

DIN


நாமக்கல்:  பரமத்தி வேலூர் அருகே தோட்டத்தில் இருந்த மூதாட்டி கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட நிலையில், அவரது கணவர் படுகாயமடைந்துள்ளார்.

பரமத்தி வேலூர் அருகே உள்ள குச்சிகாடு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் மோகனூர் சர்க்கரை ஆலையில் காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நல்லம்மாள் (65). இவர்களுக்கு கீதா, கோமதி, யமுனா என்ற மூன்று மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இந்த நிலையில், சண்முகமும் அவரது மனைவி நல்லம்மாளும் குச்சிக்காடு தோட்டத்தில் தனியாக வசித்து வந்தனர். அடுத்த மாதம் தனது மூத்த மகளின் பேத்தி சிவானிக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் வைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சண்முகத்தின் வீட்டிற்கு முன்பும், பாதையிலும் மர்ம நபர்கள் மிளகாய் பொடியை தூவிவிட்டு, பின்புறம் இருந்த தண்ணீர் குழாயை உடைத்து விட்டு சென்றுள்ளனர்.  இது குறித்து பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சண்முகம், பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு சண்முகத்தின் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள், வீட்டிற்கு முன்பு இருந்த மரத்தில் ஏறி மாடிக்கு சென்று படிகட்டு வழியாக உள்ளே சென்றுள்ளனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த நல்லம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். சண்முகத்தை கடுமையாக தாக்கியுள்ளனர்.

வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் சண்முகம், நல்லம்மாள் வீட்டைவிட்டு யாரும் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், வீட்டிற்குள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

பரமத்தி வேலூர் காவலர்களுக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் நல்லாம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Story image

மேலும், உயிருக்கு போராடிய சண்முகத்தை மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், காவல் துணை கண்காணிப்பாளர் ராஜமுரளி மற்றும் போலீசார் கொலை நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும், கைரேகைகளை பதிவு செய்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.